தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் குரு பௌர்ணமி மற்றும் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஜெயந்தி விழா நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து விழா மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, தான் வாழும் நாட்களை முன்பே அறிந்து அனைத்து சமூகப் பணிகளையும் செய்து காட்டியவர் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் என தெரிவித்தார். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத் தான் அமையும் எனவும் அவர் கூறினார்.