மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டதாக நடிகர் தியாகு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மனைவி மற்றும் நண்பர்களுடன் நடிகர் தியாகு சுவாமி தரிசனம் செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக சக்கர நாற்காலியில் கோயிலுக்கு சென்ற அவர், மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதியிலும் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜயகாந்த் இறப்புக்கு பின் முதல்முறையாக வெளியே வந்திருப்பதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் வெற்றி பெற்று விஜய பிரபாகரன் முக்கிய பொறுப்பிற்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.