புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் நடைபெற்ற மாட்டுவண்டு எல்கை பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மீமிசலில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மொத்தம் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பந்தய இலக்கை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின.
இதனை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு கேடயங்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.