திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சொல்லும் குறைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை எனக் கூறி அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மாநகராட்சி நிர்வகாத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதன் பின் பேட்டியளித்த அதிமுக கவுன்சில தங்கராஜ், வார்டுகளில் இருக்கக்கூடிய சாக்கடை கழிவுநீர் பிரச்னை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிவித்தும், தீர்வு காணப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இதே நிலை நீடித்தால் கவுன்சிலர்கள் இணைந்து போராடுவோம் என்று அவர் எச்சரித்தார்.