பிரான்ஸில், அடுக்கமாடி கட்டித்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை ஒருவர் காப்பாற்றிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் 6ஆவது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது வீட்டினுள் சிக்கியவர்கள் காப்பாற்றும் படி கூச்சலிட்டனர்.
இதைக்கண்ட ஃபெளசினோ சிஸ்ஸே என்பவர், அடுக்குமாடி கட்டடத்தின் 6ஆவது மாடியின் விளிம்பில் நின்று கொண்டு, அவர்களைக் காப்பாற்றினார். அவரின் இந்த துணிச்சலான செயலினை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தொலைப்பேசி மூலம் பாராட்டினார்.