சிரியாவின் லடாகியா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
லடாகியா பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து மளமளவென பரவி வருகிறது. இதனால் பல லட்சம் ஹெக்டேர் காடுகள் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி அப்பகுதி வழியாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.