இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களுக்காகத் தமிழீழம் கோரிப் போராடி வந்தனர்.
இறுதி யுத்தம் நடைபெற்ற வன்னிப் பகுதிக்கு அருகில் உள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பெரிய நிலத்தடி பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
இலங்கை போரின்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்த பதுங்கு குழியைப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பிரதீபன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பதுங்கு குழியைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.