ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை மீண்டும் வெடித்ததால் அங்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
ககோஷிமா பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இவற்றில் பெரிய எரிமலையான சகுராஜிமா அண்மையில் வெடித்துச் சிதறியது.
இந்நிலையில் அந்த எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் எரிமலை கற்கள் வெடித்துச் சிதறி லாவா குழம்பு வெளியேறுவதால், பாதுகாப்பு கருதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.