கவுதிமாலா நாட்டில் அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் 5 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதன் பின்னர், அமடிட்லான் மற்றும் அலோடெனாங்கோ இடையே 3 புள்ளி 9 முதல் 5 புள்ளி 6 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலைகளில் பாறைகள், மண், மரங்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. அவற்றைச் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.