தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் இரு மாநில வருவாய்த் துறையினர், இரு மாநில போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் அரங்கேற்றப்பட்டு வரும் கடத்தல் சம்பவங்களை எப்படித் தடுப்பது என்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.