செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்தும் தொடர் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பல மாதங்களாக அமைதி நிலவிய நிலையில், ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் இரண்டு கப்பல்கள் மூழ்கியுள்ளன.
Eternity C சரக்குக் கப்பலிலிருந்த 25 பேர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியுள்ள ஊழியர்களில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் மாயமான நிலையில், தாக்குதலுக்கு ஹவுதி போராளிகள் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.