எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யக்காரினோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகளவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டரை வாங்கினார். அதற்கு ‘எக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்தார்.
இதையடுத்து, அதன் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யக்காரினோவை, எலான் மஸ்க் நியமனம் செய்தார்.
இந்த சூழலில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள லிண்டா, எலான் மஸ்க்கிற்கு நன்றி உள்ளவராக இருப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.