கடந்த 2022-ல் தனது வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பான செந்தில்பாலாஜி மீதான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யகோரி சேலத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
விசாரணை அதிகாரி அச்சத்திலிருந்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளதாகவும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 45, 46 ஆவது பத்திகளை நீக்க வேண்டும் எனக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களால் வழக்கு விசாரணையில் சம வாய்ப்பு மறுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.