ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிடக்கூடாது என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் குருபூஜையில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வருகை தந்தார். அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திருவள்ளுவர் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருவதாகவும், காவியை வைத்து அரசியல் செய்வதை அவர் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சருக்கென மகத்தான அதிகாரம் உள்ளது என்றும், ஆளுநருக்கான அதிகாரத்தை தவறு சொல்வது ஏற்புடையது அல்ல எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.