திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையின்போது, தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழிலும் மந்திரம் ஓதப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
திருப்பரங்குன்றம் கோயிலில் வரும் 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை பூஜைகள் தொடங்கின. அப்போது, அங்கு வந்த தமிழ் பாடசாலை நிறுவனர் சத்தியபாமா, தமிழ் ஓதுவார்கள் யார் உள்ளனர் என்றும், அவர்களை அடையாளப்படுத்துமாறும் கேட்டுள்ளார்.
மேலும், யாகசாலைக்குள் செல்ல முயற்சித்தபோது கோயில் சிவாச்சாரியார்கள் சத்யபாமாவைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், இருதரப்பினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.