தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஒட்டுக் கேட்டும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்டும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாகவும், அதனைத் தான் அமரும் நாற்காலிக்குக் கீழே இருந்து கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, தந்தைக்கும், மகனுக்கும் மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், ராமதாஸின் இந்த குற்றச்சாட்டுத் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.