கிரீஸில் ரஃபேல் போர் விமானங்களைப் படம் பிடித்த 4 சீனர்களை போலீசார் கைது செய்தனர்.
தனக்ரா நகரில் உள்ள பாதுகாப்புப் படைத் தளத்திற்குச் சென்று ரஃபேல் போர் விமானங்களை 4 பேர் ரகசியமாகப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதையறிந்த போர் பிரிவின் விமானப்படை காவல்துறை 4 பேரையும் கைது செய்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து உளவு பார்ப்பதற்காகப் புகைப்படம் எடுத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.