அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கோலாகாட் பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில், மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.