ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15 கட்டங்களில் மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக 16- வது கட்டமாக இன்று, 51 ஆயிரம் இளைஞர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிய நியமன ஆணையை வழங்குகிறார். இதற்காக 47 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.