இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று பெள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்தை விட 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது.