மதுரை மாநகராட்சியை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கண்டித்து இன்று போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மதுரை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான கட்டங்களுக்கு வரிவிதிப்பு முறைகேடாக நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட ₹150 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. நாடு போற்றும் நல்லாட்சி என்று பெருமை பேசும் அறிவாலயம்
அரசு, முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டு, தற்போது மண்டல் தலைவர்களை இராஜினாமா செய்ய வைத்து முறைகேட்டை மறைக்கப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். .
சொத்து வரியை உயர்த்தி மக்களை வதைத்தது போதாதென்று முறைகேடுகளால் மக்கள் வரிப்பணத்தையும் சூறையாடும் திமுக அரசை எதிர்த்து மாபெரும் கண்டனப் போராட்டத்தை பாஜக சார்பாக மதுரையில் முன்னெடுக்க உள்ளோம்.
இன்று காலை 10 மணிக்கு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, புதூர் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாவட்ட பாஜக சொந்தங்களுடன் இணைந்து போராட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசின் ஊழல் முகத்தை எதிர்த்து நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வோம்! அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை வதைக்கும் மக்கள் விரோத திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.