காசாவில் மே 27-ம் தேதி முதல் தற்போது வரை உணவுக்காக காத்திருந்த 800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற பாலஸ்தீனியர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அப்போது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு நடைபெற்று வரும் தொடர் தாக்குதலால் மட்டும் உணவுக்காக காத்திருந்த 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.