ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த தவறான முடிவுக்கான விலையை நாம் தற்போது கொடுத்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் பாரதிய ஜனசங்கம் கட்சியின் நிறுவனரும், இந்தியாவின் முதல் மத்திய தொழில்துறை அமைச்சருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 1947ஆம் ஆண்டு சிறந்த பொருளாதார நாடுகள் பட்டியலில் 6வது இடத்திலிருந்த இந்தியா, 2014ஆம் ஆண்டு 11வது இடத்துக்குத் தள்ளப்பட்டதாகக் கூறினார்.
பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியதாகக் குறிப்பிட்ட அவர், உலக நாடுகள் மத்தியில் இந்தியர்களுக்கான மதிப்பு தற்போது கூடியுள்ளதாகத் தெரிவித்தார்.