டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி வீரர் கர்டிஸ் காம்பெர், தொடர்ந்து 5 பந்தில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் அவர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். ஏற்கனவே இவர், கடந்த 2021-ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.