தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை 4 மணி நேரமாகப் போராடி வனத்துறையினர் பிடித்தனர்.
ஆர்.வி. நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாகச் சுற்றித்திரிந்த குரங்கு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது.
அண்மையில் குரங்கு கடித்ததில் திகழினி என்ற 3 வயதுக் குழந்தை காயமடைந்தது. குரங்கைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 4 மணி நேரமாகப் போராடி குரங்கைப் பிடித்தனர்.