சீனாவில் தனது தாய் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி அவரை சவப்பெட்டியில் அமர வைத்து மகன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த வினோத வழிபாடு அமைதியையும், செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கும் எனச் சீனர்கள் நம்புகின்றனர்.
இதனால் தனது தாய் உயிரோடு இருக்கும் போதே சவப்பெட்டியை வாங்கி, அதில் தாயை அமர வைத்து மகன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்.
16 பேர் அந்த சவப்பெட்டியைச் சுமக்க, மேளதாளங்களுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது.