அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு, பாஜகவினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத ஏற்படும் என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தமிழர்களின் பாரம்பரியம் காக்கக் கட்டுமான பணியை உடனே நிறுத்தாவிட்டால், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.