பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல ரோப் கார் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாகத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுவரை மின் இழுவை ரயிலைப் பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.