பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் தனியார் துப்பறியும் குழுவினர் 3 மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை செய்தனர்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
அதன்மூலம் தமது பேச்சுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவினர் 5 பேர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற ஆய்வு முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.