பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பயிற்சி மையங்கள் விளம்பரங்களுக்காக அதிக அளவிலான பணத்தை செலவிடுவதாகவும், அத்தகை மையங்கள் மாணவர்களின் சிந்தனைகளை நசுக்கி வருவதாகவும் விமர்சித்தார்.
இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு இது அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்ட குடியரசு துணை தலைவர், நமது கல்வி முறை கறைபடுத்தப்படுவதையும், களங்கப்படுத்தப்படுவதையும் அனுமதிக்க முடியாது என கூறினார்.
பயிற்சி மையங்கள் காளான்கள் போன்று அதிகளவில் முளைத்து வருவதாகவும், இதனால் ஏற்படும் தீமைகளை நாம் சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.