விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றை பிரிவு இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கும், அமெரிக்க வீராங்கனை அனிசிமோவாவும் பலப்பரீட்சை நடத்தினர். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6க்கு பூஜ்ஜியம், 6க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட் கணக்கில் மிக எளிதாக வெற்றி பெற்றார்.
அதேபோட்ல் விம்பிள்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் ரிங்கி ஹிஜிகடா- டேவிட் பேய் ஜோடியும், பிரிட்டனை சேர்ந்த ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடியும் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய பிரிட்டன் ஜோடி நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது.