தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் தாக்கியதில் படுகாயமடைந்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவர் தனது வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட தொடங்கியுள்ளார்.
அப்போது அண்டை வீட்டுக்காரரும், திமுகவை சேர்ந்தவருமான பாலமுருகன் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அடியாட்களுடன் வந்து ராஜதுரை, அவரது மனைவி உள்ளிட்டோரை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில், தப்பியோடிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.