சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளி கடத்திய கும்பலை தட்டிக் கேட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏத்தாப்பூர் கடை வீதியைச் சேர்ந்த பிரசாந்த், இந்து முன்னணியின் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு கும்பல் மண் அள்ளியுள்ளது. இதுகுறித்து தாசில்தாருக்கு தகவல் அளித்த பிரசாந்த், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திமுக பிரமுகர் மணிகண்டனும், சில நபர்களும், மணல் கடத்தலை தடுக்க நீ யார்? எனக்கேட்டு பிரசாந்த்தை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரசாந்த், தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.