கடலூரில் உள்ள வீராணம் ஏரி கனமழை காரணமாக முழுகொள்ளளவை எட்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 புள்ளி 5 அடியை எட்டியதால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக 73 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.