திரைப்படக் கலைஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோட்டா ஸ்ரீனிவாசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தனது தனித்துவமிக்க நடிப்புத் திறனால், திரையரங்கில் ஜொலித்தவர் கோட்டா ஸ்ரீனிவாசன் , ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அதன் மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயத்தில், கோட்டா ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.