திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
சிறுமலை அடிவார பகுதியான ஊத்துப்பட்டி, வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடுமையான வெயில் மற்றும் வரத்து குறைவால், பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் 30 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பன்னீர் திராட்சை, தற்போது 80 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.