பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், 2018ஆம் ஆண்டு சக வீரரான பருபுல்லி கஷ்யப் என்பவரை கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், தற்போது தங்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், தாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.