விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அல்காரசை வீழ்த்தி, இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரும், நம்பர்-2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும் தகுதி பெற்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6க்கு 4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். உடனே, சுதாரித்துக்கொண்ட ஜானிக் சின்னர், அடுத்தடுத்த செட்களில் தனது அதிரடியை காட்ட தொடங்கினார்.
அட்டகாசமான ஷாட்கள் மூலம் அல்காரசை தடுமாற செய்த அவர், 6க்கு 4, 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிப்பெற்றார். இதன்மூலம் ஜானிக் சின்னர் முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை தனதாக்கினார்.