திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை காண அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை மட்டுமே போலீசார் அனுமதித்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாலையில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலுக்கு அருகே விஐபி வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும், பொதுப் போக்குவரத்தை 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்ததால் நீண்ட தூரம் நடந்து வந்ததாகவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை மட்டுமே போலீசார் அனுமதித்ததாகவும், மற்றவர்களை விரட்டியடித்ததாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அனுமதிச்சீட்டு வைத்திருந்தவர்களையும் உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.