வாழப்பாடி அருகே கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதைத் தட்டி கேட்ட இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஏத்தாப்பூர் பேரூராட்சியின் திமுக சேர்மன் அன்பழகன் கனிம வளங்களைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் பிரசாந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஏத்தாப்பூர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.