திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது கடையை இடித்து அகற்றிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்த கடையை எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென நகராட்சி ஊழியர்கள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.
நகராட்சி அதிகாரிகளின் செயலால், கடையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் வீணானதாக மாற்றுத்திறனாளி வேதனை தெரிவித்துள்ளார்.