சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
காமராஜபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பெண்ணின் கணவர் சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் வினோத் ஆகியோர், அருணாச்சலத்தைக் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக, கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார்.