மதிமுகவிற்காக 32 ஆண்டுகளாக உழைத்த தன் மீது, மகனுக்காக வைகோ துரோகி பட்டம் சுமத்தியதாக அக்கட்சியின் துணை செயலாளர் மல்லை சத்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் புலிப் படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று தான் துரோகம் செய்துவிட்டதாக வைகோ தன் மீது பழி சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மகன் துரை வைகோவின் அரசியலுக்காக 32 ஆண்டுகளாக குடும்பத்தை மறந்து கட்சி பணியாற்றிய தன் மீது வைகோ துரோகப் பழி சுமத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர்,
தன் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை வைகோ சொல்லி இருக்கலாமே எனக் கூறியுள்ளார்.
இனி எக்காலத்திலும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற பழியைச் சுமத்த வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ள மல்லை சத்யா, காலம் முழுவதும் மதிமுகவிற்கு நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.