சேலம் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தியதற்காகப் பணம் கேட்டதை தட்டிக்கேட்டதற்காக போலீசார் கூடுதல் அபராதம் விதித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சிக்குள்ளானார்.
சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கனரக லாரியை, இயற்கை உபாதையை கழிக்க, சாலையோரம் ஓட்டுநர் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார், 200 ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு லாரி ஓட்டுநர் முத்துக்குமார் மறுப்பு தெரிவித்ததால், சாலையோரம் லாரியை நிறுத்தியதற்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான லாரி ஓட்டுநர், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.