மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளராகப் பார்த்திபனை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆணையர் மணிவண்ணன் மன்னார்குடி டிஎஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப் பிரிவில் பணியாற்றிய செல்வி.காவியா மணப்பாறை டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தைத் தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் நிலையில் புதிய டிஎஸ்பியை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.