6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை, NAMMA HEALTH திட்டத்தின் அட்டை மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NAMMA HEALTH திட்டத்தின் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலமாக பெண்களுக்காக பிரத்தியேக உடல்நல பரிசோதனை, காப்பீடு இல்லாத நோயாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் அறை வாடகை, குறைந்த விலையில் உயர்தர மருத்துவ பரிசோதனைகள் செய்துதரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல் 6-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, 10 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்படவுள்ளது.