திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை அறிக்கையைக் கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது
இந்த நிலையில், காரைக்குடி டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மானாமதுரை டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வழக்கை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் பொறுப்பேற்றிருப்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.