காஷ்மீரில் தியாகிகள் தினத்தை ஒட்டி மரியாதை செலுத்தச் சென்ற முதலமைச்சர் உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர் சுவர் ஏறிச் சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தியாகிகள் தினத்தை ஒட்டி, தியாகிகளின் கல்லறைக்குச் செல்லவிடாமல் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய படையினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்ற உமர் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் நினைவிடத்தின் சுவர் மீது ஏறி உள்ளே சென்று மரியாதை செலுத்தினார்.