கும்பகோணம் அருகே மனைவி உடல் நலக் குறைவால் உயிரிழந்த விவகாரத்தில் உரியச் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி கணவனை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமிக்கும், சாக்கோட்டையைச் சேர்ந்த சேதுராமன் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
தொடர்ந்து பாக்கியலட்சுமியிடம் நகை கேட்டு சேதுராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலிலிருந்த பாக்கியலட்சுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில் உரியச் சிகிச்சை அளிக்காததாலே பாக்கியலட்சுமி உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சேதுராமனை கைது செய்தனர்.