சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய வீரர் சுபன்ஷு சுக்லா உட்பட 4 வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமிக்குத் திரும்புகிறது.
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்கள், கடந்த ஜூன் 25-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
14 நாட்களான இந்தப் பயணத்தில், நான்கு பேர் கொண்ட குழுவினர் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, சுபன்ஷு சுக்லா விண்வெளியில் பயிர் வளர்ப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் அவர்களது பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 4 வீரர்களும் பூமிக்குத் திரும்புகின்றனர்.
அவர்கள் 4 பேரும் நாளை மதியம் 3 மணியளவில் பூமியை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.